முகப்பு
திருவாரூர்

நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமுதாய வளைகாப்பு

நீடாமங்கலம் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நேற்று நடைபெற்றது. 

Updated On : 13 டிசம்பர், 2021 at 2:24 PM
நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த சமுதாய வளைகாப்பு விழாவில் கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினார் ஒன்றியக்குழுத்தலைவர் செந்தமிழ்ச்செல்வன்.
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:11 AM

நீடாமங்கலம் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நேற்று நடைபெற்றது. 

நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த விழாவிற்கு ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் செந்தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். ஒன்றிய ஆணையர் மணிமாறன், கூடுதல் ஆணையர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

விழாவில் 108 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு அணிவிக்கப்பட்டு சீர்வரிசை பொருட்கள் அளிக்கப்பட்டது. மதிய உணவும் வழங்கப்பட்டது. கர்ப்பிணி பெண்கள் மலர் மாலை சூடி விழாவில் கலந்து கொண்டனர். 

விழாவில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் தாரணி உள்ளிட்ட பலர் கர்ப்பிணி பெண்களை வாழ்த்தினர். முன்னதாக நீடாமங்கலம் வட்டார குழந்தை வளர்ச்சித்திட்ட அலுவலர் (பொறுப்பு)புவனேஸ்வர் வரவேற்றார். 

முடிவில் குழந்தை வளர்ச்சித்திட்ட மேற்பாரைவையாளர் கலா நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.