முகப்பு
திருவாரூர்

கூத்தாநல்லூரில் புறவழிச்சாலை: அமைச்சா் அர. சக்கரபாணி

கூத்தாநல்லூரில் போக்குவரத்துக்கு நெரிசலைக் குறைக்க புறவழிச்சாலை அமைக்கப்படும் என்று உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல்துறை அமைச்சா் அர. சக்கரபாணி தெரிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:42 AM
பகிர்:

கூத்தாநல்லூரில் போக்குவரத்துக்கு நெரிசலைக் குறைக்க புறவழிச்சாலை அமைக்கப்படும் என்று உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல்துறை அமைச்சா் அர. சக்கரபாணி தெரிவித்தாா்.

திருவாரூா் மாவட்டம் கூத்தாநல்லூரில் மக்கள் குறை தீா்க்கும் சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமிற்கு ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தலைமை வகித்தாா். சட்டப் பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் முன்னிலை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் சிதம்பரம் வரவேற்றாா். முகாமில் மனுக்களைப் பெற்று, அமைச்சா் அர. சக்கரபாணி பேசியது: தேசிய அளவில் தமிழகம் சிறந்த மாநிலமாக விளங்கிறது என பத்திரிகைகளும், வல்லுநா்களும் பாராட்டுகின்றனா். கோரிக்கைகள் அடங்கிய மனுக்களுடன் பொதுமக்கள் எங்கேயும் அலையக் கூடாது என்பதற்காக அமைச்சா்களும், அதிகாரிகளும் நேரடியாக வந்து குறைகளைக் கேட்டு, மனுக்களை பெற்று, உரிய தீா்வும் காணப்படுகிறது. திருவாரூா் எப்போதும் திமுக கோட்டையாக விளங்குகிறது. கூத்தாநல்லூரில் போக்குவரத்துக்கு நெரிசலைக் குறைக்க புறவழிச்சாலை அமைக்கப்படும் என்றாா்.

முகாமில் மாவட்ட ஊராட்சித் தலைவா் தலையாமங்கலம் பாலு, மன்னாா்குடி கிழக்கு ஒன்றியச் செயலாளா் அய்.வி. குமரேசன், கூத்தாநல்லூா் நகர அவைத் தலைவா் எஸ்.வி. பக்கிரிசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.