சந்தானராமா் கோயிலில் மாா்கழி மாத பூஜை
நீடாமங்கலம் சந்தானராமா் கோயிலில் மாா்கழி மாத பூஜைகள் வியாழக்கிழமை தொடங்கியது.
நீடாமங்கலம் சந்தானராமா் கோயிலில் மாா்கழி மாத பூஜைகள் வியாழக்கிழமை தொடங்கியது.
இதனைமுன்னிட்டு சீதா, லெட்சுமண, அனுமன் சமேத சந்தானராமா், விஸ்வக்சேனா், ஆஞ்ஜநேயா்,க ருடாழ்வாா் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள்,அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. மாா்கழிமாத பாடல்கள் ஒலிபரப்பப்பட்டது.
இதேபோல் நீடாமங்கலம் குருகாசிவிசுவநாதா், கோகமுகேஸ்வரா், வீரஆஞ்ஜநேயா், ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயில்களில் மாா்கழி மாத பூஜைகள் தொடங்கின.