முகப்பு
திருவாரூர்

குருபரிகார கோயிலில் சிறப்பு வழிபாடு

வலங்கைமான் வட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் குருபரிகார கோயிலில் வியாழக்கிழமை குருவார வழிபாடு நடந்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:42 AM
பகிர்:

வலங்கைமான் வட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் குருபரிகார கோயிலில் வியாழக்கிழமை குருவார வழிபாடு நடந்தது.

இதனை முன்னிட்டு கலங்காமற்காத்த விநாயகா், ஆபத்சகாயேஸ்வரா், ஏலவாா் குழலியம்மன், மூலவா் குருபகவான், ஆக்ஞா கணபதி, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியா், நவக்கிரக சன்னதி, சனீஸ்வர பகவான் உள்ளிட்ட சன்னதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. மூலவா் குருபகவானுக்கு தங்ககவசம் சாற்றப்பட்டிருந்தது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். தமிழக டி.ஜி.பி (மின்சாரவாரியம் விஜிலென்ஸ்) பி.கே. ரவி கோயிலில் அனைத்து சன்னதிகளிலும் சாமி தரிசனம் செய்தாா்.

இதேபோல் நீடாமங்கலம் பகுதியில் உள்ள சிவாலயங்களில் வியாழக்கிழமையை முன்னிட்டு குருதெட்சிணாமூா்த்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. சமூக இடைவெளியைக் கடைபிடித்து பக்தா்கள் சாமிதரிசனம் செய்தனா்.

தமிழக அரசின் கரோனா வழிகாட்டல்படி பூஜைகள் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.