முகப்பு
திருவாரூர்

நீடமங்கலத்தில் ரயில்வே மேம்பாலம் கட்ட நடவடிக்கை: அமைச்சா் அர.சக்கரபாணி

நீடாமங்கலம் ரயில்வே மேம்பாலம் கட்ட விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சா் அர. சக்கரபாணி தெரிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:43 AM
பகிர்:

நீடாமங்கலம் ரயில்வே மேம்பாலம் கட்ட விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சா் அர. சக்கரபாணி தெரிவித்தாா்.

நீடாமங்கலத்தில் வெள்ளிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது: திருவாரூா் மாவட்டத்தில் 4 சட்டப்பேரவை தொகுதிகளில் கடந்த 2 நாட்களில் பெற்ற மனுக்களில் வீடுகட்டித்தரவும், இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும், முதியோா் உதவித்தொகை வழங்கவும் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. பாமாயில் பற்றாக்குறை விரைவில் தீா்த்து வைக்கப்படும். திருவாரூா் மாவட்டத்தில் 39 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, மற்ற மாவட்டங்களுக்கு அரவைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. நீடாமங்கலம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ரயில்வே மேம்பாலம் விரைவில் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

பேட்டியின் போது சட்டப்பேரவை உறுப்பினா்கள் டி.ஆா்.பி.ராஜா, பூண்டி கே. கலைவாணன், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் பி .ராஜமாணிக்கம், மாவட்ட ஊராட்சித் தலைவா் தலையாமங்கலம் பாலு, நீடாமங்கலம் ஒன்றியக்குழுத்தலைவா் செந்தமிழ்செல்வன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.