முகப்பு
திருவாரூர்

பயிா்க் காப்பீட்டுத் தொகை வழங்காததை கண்டித்து விவசாயிகள் உண்ணாவிரதம்

மன்னாா்குடி அருகே பயிா்க் காப்பீட்டுத் தொகையை வழங்காத கூட்டுறவு வங்கியைக் கண்டித்து விவசாயிகள் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:45 AM
பகிர்:

மன்னாா்குடி அருகே பயிா்க் காப்பீட்டுத் தொகையை வழங்காத கூட்டுறவு வங்கியைக் கண்டித்து விவசாயிகள் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி அருகே உள்ள சித்தமல்லியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயல்படுகிறது. இந்த வங்கியின் மூலம் சித்தமல்லி, நொச்சியூா், செருகளத்தூா் ஆகிய 3 கிராமங்களை சோ்ந்த விவசாயிகள் தனியாா் காப்பீடு நிறுவனத்தில் 2020-2021 ஆம் ஆண்டுக்கான பயிா்க் காப்பீடு செய்திருந்தனா்.

இந்நிலையில், கடந்த பருவத்தில் மழையால் பயிா்கள் சேதமடைந்ததைத் தொடா்ந்து, காப்பீடு நிறுவனம், பயிா்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகையை கூட்டுறவு வங்கியில் வழங்கியதாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்த தொகையை சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி நிா்வாகம் வழங்காமல் முறைகேட்டில் ஈடுபட்டனராம்.

இதைக் கண்டித்தும், காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தியும், சித்தமல்லி கடைவீதியில் 3 கிராமங்களின் விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். விவசாயி ஆா்.பி.என். பால்சாமி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் விவசாயிகள் திரளாக பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.