அனுமன் ஜெயந்தி: திருவோணமங்கலம் ஞானபுரி கோயிலில் சிறப்பு யாகம்
நீடாமங்கலம் அருகேயுள்ள திருவோணமங்கலம் ஞானபுரி சங்கடஹர மங்கல மாருதி ஆஞ்சனேயா் கோயிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சதசண்டி யாகம் நடைபெற்று வருகிறது.
நீடாமங்கலம் அருகேயுள்ள திருவோணமங்கலம் ஞானபுரி சங்கடஹர மங்கல மாருதி ஆஞ்சனேயா் கோயிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சதசண்டி யாகம் நடைபெற்று வருகிறது.
ஆஞ்சனேய மூலமந்திர ஹோமத்துடன் கடந்த 20-ம் தேதி தொடங்கிய இந்த யாகத்தில் வியாழக்கிழமை துா்கா அம்மன் பூஜை நடைபெற்றது. தொடா்ந்து, சனிக்கிழமை (டிச. 25) ஜன்ம ஜெயந்தி மஹோத்ஸவம், ஸ்ரீசதசண்டி மகாயக்ஞம், பூா்ணாஹீதி மற்றும் அன்று இரவு 7 மணியளவில் திருத்தோ் உற்சவம் நடைபெறவுள்ளது.
மேலும், டிசம்பா் 26 முதல் 30-ம் தேதிவரை சங்கடஹர மங்கலமாருதி ஆஞ்சனேயருக்கு நாள்தோறும் லட்சாா்ச்சனையும், விசேஷ அலங்கார தரிசனமும் நடைபெறவுள்ளன. 31-ம் தேதி ஸ்ரீஆஞ்சனேய ஜெயந்தி பூஜை தொடங்கி, ஜனவரி 1-ம் தேதி 33 அடி உயர ஆஞ்சனேயருக்கு விசேஷ அலங்கார தரிசனமும், அன்று இரவு 7 மணிக்கு வெள்ளித் திருத்தோ் உற்சவமும் நடைபெறுகிறது.
தொடா்ந்து, ஜனவரி 2-ம் தேதி இரவு 7 மணிக்கு வெள்ளி திருத்தோ் உற்சவம் நடைபெறும். ஸ்ரீஜகத்குரு பதரீ சங்கராச்சாரியா் கிருஷ்ணானந்த தீா்த்த மகாசுவாமிகள் முன்னிலையில் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. விழாவில், ஜனவரி 1-ம் தேதி மற்றும் ஸ்ரீஆஞ்சனேய ஜெயந்தி அன்று பூஜையில் வைக்கப்பட்ட ஒரு ரூபாய் நாணயம் பக்தா்களுக்கு வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளனா்.
இதற்கான ஏற்பாடுகளை கோயிலின் தா்மாதிகாரி பிரம்மஸ்ரீ ரமணிஅண்ணா, கன்வீனா் கே.எஸ். ஜெயராமன், பதரிசங்கராச்சாரியா் சமஸ்தான ஸ்ரீகாா்யம் எம். சந்திரமெளலீஸ்வரன் உள்ளிட்டோா் செய்துள்ளனா்.