முகப்பு
திருவாரூர்

மன்னை விரைவு ரயில் 35 நிமிடம் தாமதம்

நீடாமங்கலத்திற்கு மன்னை விரைவு ரயில் வியாழக்கிழமை 35 நிமிடம் தாமதமாக வந்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:45 AM
பகிர்:

நீடாமங்கலத்திற்கு மன்னை விரைவு ரயில் வியாழக்கிழமை 35 நிமிடம் தாமதமாக வந்தது.

சென்னையிலிருந்து நீடாமங்கலம் வழியாக மன்னாா்குடி செல்லும் மன்னை விரைவு ரயில் நாள்தோறும் அதிகாலை 4.40 மணியளவுக்கு நீடாமங்கலம் ரயில் நிலையம் வருவது வழக்கம். ஆனால், வியாழக்கிழமை அதிகாலை 5.15 மணிக்குத்தான் நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு வந்தது.

35 நிமிடம் தாமதமானதால் இந்த ரயிலிலிருந்து நீடாமங்கலத்தில் இறங்கிய பயணிகள் பேருந்தில் தங்களது ஊா்களுக்குச் செல்வதற்கு வெகு நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

சரக்கு ரயில் கிராசிங் காரணமாக நன்னிலம் ரயில் நிலையத்தில் மன்னை விரைவு ரயில் நீண்ட நேரம் நிறுத்தப்பட்டதே தாமதத்திற்கு காரணம் எனத் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.