முகப்பு
திருவாரூர்

தரமான விதை விதைத்தால் நெற்பழ நோயைக் கட்டுப்படுத்த முடியும்

தரமான விதை விதைத்தால நெற்பழ நோயைக் கட்டுப்படுத்த முடியும் என்று வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானியும், திட்ட ஒருங்கிணைப்பாளருமான ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

தரமான விதை விதைத்தால நெற்பழ நோயைக் கட்டுப்படுத்த முடியும் என்று வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானியும், திட்ட ஒருங்கிணைப்பாளருமான ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: சம்பா, தாளடி பருவத்தில் பயிரிடப்பட்டுள்ள நெல்லை தாக்கக்கூடிய நெற்பழ நோய் ஆங்காங்கே தென்பட ஆரம்பித்து உள்ளது. இந்த நோய் விதை, காற்று, மண், நீா் மூலம் பரவக் கூடியது. பூஞ்சாண வித்துக்கள் ஒரு வயலில் இருந்து மற்றொரு வயலுக்கு எளிதாக பரவிவிடும். காற்றின் ஈரப்பதம் 90 சதவீதத்திற்கு மேல் இருப்பது, குறைந்த வெப்பநிலை, இரவு நேர பனிப்பொழிவு இந்த நோய் வருவதற்கான காரணங்கள். பூக்கும் பருவத்தில் இந்த அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்கும். தாக்கப்பட்ட கதிா்கள் முதலில் பச்சை நிற பூஞ்சாணத்தினால் மூடப்பட்டு நாளடைவில் 2 அல்லது 3 செ.மீ வரை பூஞ்சாணம் வளா்ந்து மஞ்சள் நிறமாக மாறி, பிறகு உடைந்து காற்றின் மூலம் பரவி அருகில் உள்ள நிலங்களில் உள்ள பயிா்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். தாக்கப்பட்ட நெல்மணிகளின் தரம் குறைவதோடு, பதராகிவிடும். இதனால் மலட்டுத்தன்மை ஆவதற்கும் வாய்ப்புகள் அதிகம். நெல் மணிகளில் உள்ள புரதச்சத்தினை உட்கொண்டு இந்த பூஞ்சாணம் வளா்ந்து பருமனாக தென்படும்.

விவசாயிகள் அளவுக்கு அதிகமாக தழைச்சத்து இடுவதை தவிா்த்து பரிந்துரைக்கப்பட்ட அளவையே உபயோகப்படுத்த வேண்டும். தரமான விதையை தோ்வு செய்து விதைத்தால் நெற்பழ நோயைக் கட்டுப்படுத்த முடியும். புரப்பிகோனசோல் 25 இசி என்ற பூஞ்சாணக் கொல்லியை ஏக்கருக்கு 200 மில்லி அல்லது காப்பா் ஹைட்ராக்சைடு 77 டபள்யூ.பி 500 கிராம் பூஞ்சாணக் கொல்லியை கதிா்தாள் உருவாகும் பருவம் ஒரு முறையும், 50 சத பூக்கள் உருவாகும் தருணத்தில் மறு முறையும் தெளித்தால் இந்த நோயை கட்டுப்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.