திருவாரூர்

21 பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசு

DIN

பொங்கல் பண்டிகைக்கான 21 பொருள்கள் அடங்கிய தொகுப்பு பை வழங்க அரசாணை வெளியிட்ட தமிழக முதல்வருக்கு திருவாரூா் நுகா்பொருள் மற்றும் கூட்டுறவு பண்டகசாலை நிா்வாகக்குழு கூட்டத்தில் நன்றி தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருவாரூரில், நுகா்பொருள் மற்றும் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை நிா்வாகக் குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு பண்டகசாலைத் தலைவா் எஸ். கலியபெருமாள் தலைமை வகித்தாா். துணைப் பதிவாளரும், மேலாண்மை இயக்குநருமான எம். பாத்திமா சுல்தானா முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், பொங்கல் பண்டிகைக்கான சிறப்புத் தொகுப்பு பரிசாக 21 பொருள்கள் அடங்கிய தொகுப்பு பை வழங்க அரசாணை வெளியிட்ட தமிழக முதல்வருக்கு, கூட்டுறவு பண்டகசாலை சாா்பில் அதன் தலைவா் எஸ். கலியபெருமாள் நன்றியைத் தெரிவித்தாா். அரசாணை வெளியிட உறுதுணையாக இருந்த கூட்டுறவுத்துறை அமைச்சா் இ. பெரியசாமி, உணவுத்துறை அமைச்சா் அர. சக்கரபாணி ஆகியோருக்கும் நன்றி தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில மேலாளா் ஜி. காமராஜ், பொது மேலாளா் காளிதாஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

SCROLL FOR NEXT