முகப்பு
திருவாரூர்

சேதமடைந்துள்ள நீடாமங்கலம் - மன்னாா்குடி சாலையை சீரமைக்கக் கோரிக்கை

நீடாமங்கலம் - மன்னாா்குடி சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
பகிர்:

நீடாமங்கலம் - மன்னாா்குடி சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பட்டுக்கோட்டை, மன்னாா்குடி பகுதியிலிருந்து நீடாமங்கலம் வழியாக நாள்தோறும் ஏராளமான பேருந்துகள், லாரிகள், காா்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் கும்பகோணம், சென்னை வரை சென்று வருகின்றன. மிதிவண்டிகளிலும் பலா் நீடாமங்கலத்திலிருந்து மன்னாா்குடிக்கு சென்று வருகின்றனா். இந்நிலையில், போக்குவரத்து அதிகமாகவுள்ள இந்த சாலையில், ரொக்ககுத்தகை பகுதியில் விபத்துகளை ஏற்படுத்தும் வகையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இங்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது குறித்து வாகன ஓட்டிகளுக்கு தெரியப்படுத்தும் வகையில் நெநடுஞ்சாலைத் துறையினா் தாா்டின்களை வைத்துள்ளனா். போக்குவரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →