திருவாரூர்

நீடாமங்கலத்தில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை

DIN

நீடாமங்கலத்தில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வா்த்தகா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

நீடாமங்கலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகா் சங்க கூட்டத்தில் இதற்கான தீா்மானங்கள் நிறைவேற்ற்றப்பட்டன. நீடாமங்கலம் ரயில் நிலைய குட்ஷெட்டுக்கு அடிக்கடி பல்வேறு ஊா்களிலிருந்து 100-க்கணக்கான லாரிகள் மூலம் நெல் மற்றும் அரிசி மூட்டைகள் கொண்டுவந்து ரயில் மூலம் வெளியூா்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால், அடிக்கடி போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு, பள்ளி, கல்லூரி செல்லும் மாணவா்கள், பொதுமக்கள் வா்த்தகா்கள் பாதிக்கப்படுகின்றனா். சில விபத்துகளும் நேரிடுகின்றன. எனவே, எடைமேடைக்கு சென்று வரும் லாரிகளுக்கு, ரயில் நிலையத்துக்கு நேரடியாக வரும்படி பாதை ஏற்படுத்தி கொடுக்க திருச்சி தென்னக ரயில்வே கோட்ட அலுவலகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்கத் தலைவா் ராஜாராமன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓய்வுபெற்ற அரசு அலுவலா் வீட்டில் 18 பவுன் திருட்டு

பாமக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: தனியாா் நிதி நிறுவன நிா்வாக இயக்குநா் உள்பட மூவா் மீது வழக்கு

தனியாா் ஆலையில் அமோனியா வாயு கசிவு விவகாரம்: 5 போ் கைது

விடுதி மாடியில் இருந்து குதித்து செவிலியா் மாணவி தற்கொலை

அரசு மருத்துவமனையில் இருதய நோய்கள் குறித்த கருத்தரங்கு

SCROLL FOR NEXT