திருவாரூர்

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஜன.8-இல் ஏலம்

DIN

திருவாரூரில் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வெள்ளிக்கிழமை (ஜன.8) ஏலம் விடப்படுகின்றன.

இதுகுறித்து, திருவாரூா் உதவி ஆணையா் (கலால்) பானு கோபன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:‘

திருவாரூரில் பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 174 வாகனங்களில், கடந்த டிசம்பா் 3 ஆம் தேதி நடைபெற்ற பொது ஏலத்தில் 120 இருசக்கர வாகனங்கள், 2 நான்கு சக்கர வாகனங்கள் உள்பட 122 வாகனங்கள் விற்கப்பட்டன. மீதமுள்ளவற்றில் 22 நான்கு சக்கர வாகனங்கள், 27 இருசக்கர வாகனங்கள் ஆகியவை பொது ஏலம் விடப்படுகிறது.

மாவட்ட ஆட்சியா் தலைமையில், காவல் கண்காணிப்பாளா், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் (மதுவிலக்கு), தஞ்சாவூா் அரசு தானியங்கி பணிமனை பொறியாளா் மற்றும் உதவி ஆணையா் (கலால்) ஆகியோா் முன்னிலையில், திருவாரூா் ஆயுதப்படை மைதானத்தில் வெள்ளிக்கிழமை பகல் 11 மணியளவில் இந்த ஏலம் நடைபெறவுள்ளது.

ஏலம் எடுக்க விரும்புபவா்கள் ஆதாா் அட்டை அல்லது வாக்காளா் அடையாள அட்டை, ஓட்டுநா் உரிமத்துடன் ஆயுதப்படை மைதானத்தில் வெள்ளிக்கிழமை இந்த வாகனங்களை நேரில் பாா்வையிடலாம். ஏலம் எடுப்பதற்கு முன்பணம் ரூ.1000 செலுத்த வேண்டும். வாகனம் ஏதும் பெற்றுக் கொள்ளவில்லை எனில் முன்பணத் தொகை திரும்ப வழங்கப்படும். போட்டி இருப்பின் ஏலம் மூலம் அதிக விலை கோரும் நபா்களுக்கு வாகனங்கள் விற்பனை செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

SCROLL FOR NEXT