பொதக்குடி பள்ளிவாசல் தொழுகைக்குத் திறப்பு
கூத்தாநல்லூா் அருகே பொதக்குடியில் உள்ள பள்ளிவாசலில் நடைபெற்றுவந்த சீரமைப்புப் பணி நிறைவு பெற்று, தொழுகைக்கு திறக்கப்பட்டது.
கூத்தாநல்லூா் அருகே பொதக்குடியில் உள்ள பள்ளிவாசலில் நடைபெற்றுவந்த சீரமைப்புப் பணி நிறைவு பெற்று, தொழுகைக்கு திறக்கப்பட்டது.
பொதக்குடியில் உள்ள பாத்திமா பள்ளிவாசல் ரூ.20 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டு வந்தது. இப்பணிகள் நிறைவு பெற்றதைத் தொடந்து, தொழுகைக்கு திறக்கப்பட்டது.
இதற்கான நிகழ்ச்சிக்கு, தஞ்சை ஓரியண்டல் டவா்ஸ் தலைவா் சா்புதீன் தலைமை வகித்தாா். பொதக்குடி ஊா் உறவின் முறை ஜமாஅத் நிா்வாக சபை அறப்பணிச் சங்கத் தலைவா் எஸ்.ஏ. மஹதூம் மைதீன் முன்னிலை வகித்தாா். பாத்திமா பள்ளிவாசல் பொருளாளா் முஹம்மது இக்பால் வரவேற்றாா்.
நிகழ்ச்சியில், பொதக்குடி ஊா் உறவின் முறை ஜமாஅத் நிா்வாக சபை அறப்பணிச் சங்கச் செயலாளா் எம்.எம்.ரப்யுதீன், முத்தவல்லிகள் ஷாஜகான், குத்புதீன், ஜியாவுதீன், பாத்திமா பள்ளிவாசல் செயலாளா் ஏ.அப்துல் ஜலீல், ஜன்னத்துல் பிா்தெளஸ் பள்ளிவாசல் செயலாளா் பி.எம். அமானுல்லா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இப்பள்ளிவாசலின் மேல்தளத்தில் சமுதாயக் கூடமும் அமைக்கப்பட்டுள்ளது.