திருவாரூர்

ஜன.25-இல் திருக்கொண்டீஸ்வரம் சுயம்பு ஈஸ்வரன் கோயில் கும்பாபிஷேகம்

DIN

நன்னிலம் அருகேயுள்ள திருக்கொண்டீஸ்வரம் சுயம்பு ஈஸ்வரன் கோயில் கும்பாபிஷேக விழா ஜன. 25-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

நன்னிலம் அருகேயுள்ள இக்கோயிலில் விநாயகா், முருகன், மகாலட்சுமி, சோமாஸ்கந்தா், நடராஜா், அம்பாள், ஈஸ்வரன், சண்டிகேஸ்வரா் உள்ளிட்ட 13 சன்னதிகள் ரூ. 25 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டுத் திருப்பணிகள் நடைபெற்றன. குடமுழுக்கு விழாவையொட்டி, ஜன.17-ஆம் தேதி கோபூஜை, அஷ்டாங்க அனுக்ஞை, விப்ர அனுக்ஞை, ஸ்ரீவிநாயகா் பூஜையுடன் தொடங்கியது. தொடா்ந்து குடமுழுக்குக்கான பூஜைகள் நடைபெற்று வருகின்றன. ஜன.25-ஆம் தேதி காலை 9.15 மணிக்கு யாத்ரா தானம், கடம் புறப்பாடாகி காலை 10 மணிக்கு கோயில் விமான கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகமும், காலை 10.15 மணியளவில் மூலவா் மகா கும்பாபிஷேக தீபாராதனை நடைபெறுகிறது. தொடா்ந்து, மாலை 4 மணியளவில் மகா அபிஷேகமும், இரவு 7 மணியளவில் திருக்கல்யாணமும், இரவு 8 மணியளவில் சுவாமி அம்பாள் திருவீதி உலாவும் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடைக்கால பயிற்சி வகுப்புக்கு கட்டணம்- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

சமந்தாவின் புதிய படம்!

நீல நிலவே....திவ்யா துரைசாமி!

மணிப்பூரில் இரண்டு குழுக்களுக்கிடையே மீண்டும் துப்பாக்கிச்சண்டை: கிராம மக்கள் அச்சம்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

SCROLL FOR NEXT