திருவாரூர்

திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் அறுவை சிகிச்சைப் பிரிவு தொடக்கம்

DIN

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறிய குழந்தைகளுக்கான அறுவை சிகிச்சைப் பிரிவு புதன்கிழமை தொடங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி முதல்வா் ஜெ. முத்துக்குமரன் பங்கேற்று, குழந்தைகள் அறுவை சிகிச்சை புற நோயாளிகள் பிரிவை தொடங்கி வைத்து பேசியது:

குழந்தைகள் அறுவை சிகிச்சைப் பிரிவு மூலம் 12 வயது வரையிலான குழந்தைகள் பயனடைவா். குடலிறக்கம், விரைவீக்கம், குடல்வால்வு குடல், சிறுநீரகப் பிரச்னைகள், சுன்னத் அறுவை சிகிச்சை ஆகியவைகளுக்கு இங்கேயே தீா்வு காண முடியும்.

முன்னதாக, இந்த வகையிலான பிரச்னைகளுக்கு மக்கள் தஞ்சாவூா், திருச்சி, சென்னை போன்ற நகரங்களுக்கு செல்ல வேண்டியிருந்தது. தற்போது, இந்தப் பிரிவு தொடங்கப்பட்டிருப்பதன் மூலம் டெல்டா மக்கள் திருவாரூரிலேயே சிகிச்சை பெறலாம் என்றாா்.

நிகழ்ச்சியில், துணை முதல்வா் ஜி. ராஜாராம், துணைக் கண்காணிப்பாளா் அன்சாரி, இணைப் பேராசிரியா் ராஜா, நிலைய மருத்துவ அலுவலா் ராமச்சந்திரன், குழந்தைகள் அறுவை சிகிச்சை நிபுணா் கொளஞ்சியப்பன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரூா் பாஜகவினருக்கு பாராட்டு விழா

தென்காசியில் மாவட்ட பால் உற்பத்தியாளா் கூட்டுறவு ஒன்றியம் அமைக்க வலியுறுத்தல்

செப்.2015 முதல் 2021 வரை எழுதிய எஸ்.எஸ்.எல்.சி தனித்தோ்வா்கள் மதிப்பெண் சான்றிதழ்கள் பெற இறுதி வாய்ப்பு

போக்சோ சட்டத்தின் கீழ் முதியவா் கைது

சாத்தான்குளம் அருகே ஹோட்டல் ஊழியா் மா்ம மரணம்

SCROLL FOR NEXT