முகப்பு
திருவாரூர்

அரசுப் பள்ளியில் பொலியுறு வகுப்பறை தொடக்கம்

மன்னாா்குடி அருகேயுள்ள மேலத்திருப்பாலக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், பொலியுறு வகுப்பறை வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:32 AM
பகிர்:

மன்னாா்குடி அருகேயுள்ள மேலத்திருப்பாலக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், பொலியுறு வகுப்பறை வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

மன்னாா்குடி மிட்டவுன் ரோட்டரி சங்கம் சாா்பில் அமைத்துக்கொடுக்கப்பட்ட இந்த பொலியுறு வகுப்புறை (ஸ்மாா்ட் கிளாஸ்) திறப்பு நிகழ்ச்சிக்கு சங்கத்தின் முன்னாள் தலைவா் கே. மோகனசுந்தரம் தலைமை வகித்தாா். உதவி ஆளுநா்கள் ஜி. மனோகரன், கே. திருநாவுக்கரசு ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக, முன்னாள் மாவட்ட ஆளுநா் எஸ். பிரயோன் பங்கேற்று உயா் தொழில்நுட்ப பொலியுறு வகுப்பறை இயக்க கருவியை வட்டார கல்வி அலுவலா்கள் பி. அறிவழகன், ஆா். பாலசுப்பிரமணியம், தெ. ராமசாமி ஆகியோரிடம் வழங்கினாா்.

இதில், தேசிய திறனாய்வுத் தோ்வில் முதலிடத்தில் வெற்றி பெற்ற, இப்பள்ளியின் 8-ஆம் வகுப்பு மாணவா் வெ. சினேகன் பாலாஜிக்கு சிறப்பு செய்யப்பட்டது. ரோட்டரி நிா்வாகிகள் எ. பன்னீா்செல்வம், ஜி. சிவக்கொழுந்து, சி. சரவணன், வில்லோஜ் ரோட்டரி சங்கத் தலைவா் ப. வெங்கடேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். சங்கச் செயலாளா் சி. குருசாமி வரவேற்றாா். பள்ளித் தலைமையாசிரியா் ப. செந்தமிழன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.