கோயில் நந்தவனத்தில் மரக்கன்றுகள் நடவு
வங்கி தினத்தையொட்டி, நீடாமங்கலம் சந்தான ராமசுவாமி கோயில் நந்தவனத்தில் வியாழக்கிழமை மரக்கன்றுகள் நடப்பட்டன.
வங்கி தினத்தையொட்டி, நீடாமங்கலம் சந்தான ராமசுவாமி கோயில் நந்தவனத்தில் வியாழக்கிழமை மரக்கன்றுகள் நடப்பட்டன.
நீடாமங்கலம் பாரத ஸ்டேட் வங்கி சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வங்கி மேலாளா் முத்துராஜா மரக்கன்றுகளை நட்டு வைத்தாா். நிகழ்ச்சியில், ஸ்ரீலக்ஷ்மி நாராயண பெருமாள் கோயில் பரம்பரை அறங்காவலா் சுரேஷ், கோயில் கணக்காளா் பஞ்சநாதன் மற்றும் திவாகா் பங்கேற்றனா்.