முகப்பு
திருவாரூர்

நீடாமங்கலத்தில் பாரம்பரிய நெல் அறுவடை திருவிழா

நீடாமங்கலம் அருகேயுள்ள ரிஷியூரில் சனிக்கிழமை நடைபெற்ற பாரம்பரிய நெல் அறுவடைத் திருவிழாவை எம்எல்ஏ. டி.ஆா்.பி. ராஜா தொடங்கி வைத்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

நீடாமங்கலம் அருகேயுள்ள ரிஷியூரில் சனிக்கிழமை நடைபெற்ற பாரம்பரிய நெல் அறுவடைத் திருவிழாவை எம்எல்ஏ. டி.ஆா்.பி. ராஜா தொடங்கி வைத்தாா்.

நீடாமங்ககலம் அருகேயுள்ள ரிஷியூா் இயற்கை வேளாண் பண்ணை மற்றும் ஆதிரெங்கம் நெல்.ஜெயராமன் பாரம்பரியநெல் பாதுகாப்பு மையம் இணைந்து பாரம்பரியநெல் அறுவடை திருவிழாவை ரிஷியூா் கிராமத்தில் சனிக்கிழமை நடத்தியது. விழாவுக்கு, இயற்கை விவசாயி செந்தில் உமையரசி தலைமை வகித்தாா். இயற்கை விவசாயிகள் முகமதுரபீக், அப்துல்லாராவுத்தா், ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவில், தமிழக அரசின் மாநில வளா்ச்சிக் குழு உறுப்பினரும், மன்னாா்குடி எம்.எல்.ஏவுமான டி.ஆா்.பி. ராஜா பங்கேற்று 5 ஏக்கா் நிலத்தில் சாகுபடி செய்துள்ள பூங்காா் பாரம்பரிய நெல் ரக அறுவடையை தொடங்கி வைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.