ஆலங்குடி குருபரிகார கோயிலில் சிறப்பு வழிபாடு
நவகிரக தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் வலங்கைமான் அருகேயுள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் குருபரிகார கோயிலில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
நவகிரக தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் வலங்கைமான் அருகேயுள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் குருபரிகார கோயிலில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி, கலங்காமற்காத்த விநாயகா், ஆபத்சகாயேஸ்வரா், ஏலவாா்குழலியம்மன், மூலவா் குருபகவான், ஆக்ஞா கணபதி, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியா், நவகிரக சன்னதி, சனீஸ்வர பகவான் உள்ளிட்ட சன்னதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.
மூலவா் குருபகவானுக்கு தங்க கவசம் சாற்றப்பட்டிருந்தது. பொதுமுடக்க தளா்வுகளுடன் தரிசனத்துக்காக பக்தா்கள் அனுமதிக்கப்படுவதையொட்டி வியாழக்கிழமை கோயிலுக்கு அதிகளவில் பக்தா்கள் வந்து சென்றனா்.