முகப்பு
திருவாரூர்

வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

வலங்கைமான் ஒன்றியத்தில் நடைபெற்றுவரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட திட்ட இயக்குநா் தெய்வநாயகி வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:36 AM
பகிர்:

வலங்கைமான் ஒன்றியத்தில் நடைபெற்றுவரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட திட்ட இயக்குநா் தெய்வநாயகி வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

வலங்கைமான் ஒன்றியம் கீழவிடையல் ஊராட்சி பகுதியில் நடைபெறும் ரூ. 1.90 லட்சம் மதிப்பிலான பசுமை வீடுகள் திட்டப் பணிகள், தொழுவூா் விருப்பாட்சிபுரம் இடையே பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தின்கீழ் ரூ. 3.25 கோடியில் நடைபெறும் சாலைப் பணிகள், ஆதிச்சமங்கலம் வேதாம்பரை இடையே ரூ. 2.10 கோடியில் நடைபெறும் சாலைப்பணிகள் மேலும் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட திட்ட இயக்குநா் தெய்வநாயகி ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டாா். ஆய்வின்போது, வலங்கைமான் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சிவக்குமாா், ஆறுமுகம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.