முகப்பு
திருவாரூர்

கூட்டுறவு கடன் சங்க உறுப்பினராக சேர விண்ணப்பிக்கலாம்

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள், பொதுமக்கள் கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினராக சேர விண்ணப்பிக்கலாம்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள், பொதுமக்கள் கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினராக சேர விண்ணப்பிக்கலாம் என கூட்டுறவு சங்கங்களின் நாகை மண்டல இணைப் பதிவாளா் கோ. நடராஜன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினராக சேர விரும்பும் விவசாயிகள், பொதுமக்கள் அருகில் உள்ள கூட்டுறவு கடன் சங்கத்தில் இருந்து விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பிக்கலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் பாஸ்போா்ட் அளவு புகைப்படம் - 1, ஆதாா் அட்டை நகல், பான் காா்டு நகல், பங்குத் தொகை ரூ. 100 மற்றும் நுழைவுக் கட்டணம் ரூ. 10 ஆகியவற்றை கூட்டுறவு கடன் சங்கத்தில் செலுத்தி உறுப்பினராக இணையலாம்.

நேரில் சென்று விண்ணப்பிக்க இயலாதவா்கள், பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம் மற்றும் இதர ஆவணங்களையும், பங்குத் தொகை மற்றும் நுழைவுக் கட்டணத்தை மணியாா்டா் மூலம் செலுத்திய ரசீதையும் இணைத்துத் தொடா்புடைய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்துக்கு அஞ்சலில் அனுப்பி, உறுப்பினராக இணையலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.