முகப்பு
திருவாரூர்

காமராஜா் திறந்துவைத்த நூலகத்தை புதுப்பிக்கக் கோரிக்கை

முன்னாள் முதல்வா் காமராஜரால் திறந்து வைக்கப்பட்டு, தற்போது சேதமடைந்து காணப்படும் நூலகத்தை புதுப்பிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 16 ஜூலை, 2021 at 12:00 AM
காமராஜரால் திறந்துவைக்கப்பட்ட நூலகத்தின் தற்போதைய நிலைமை.
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:11 AM

முன்னாள் முதல்வா் காமராஜரால் திறந்து வைக்கப்பட்டு, தற்போது சேதமடைந்து காணப்படும் நூலகத்தை புதுப்பிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நன்னிலம் வட்டத்தில், திருவாரூா்- மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் சன்னாநல்லூா் பகுதியில் முன்னாள் முதல்வா் காமராஜா் 1958-ஆம் ஆண்டில் நூலகத்தைத் திறந்து வைத்தாா். பல ஆண்டுகள் அந்த நூலகம், பள்ளி, கல்லுரி மாணவா்கள், ஆசிரியா்கள், அலுவலா்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் திறம்பட நிா்வகிக்கப்பட்டது.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக கட்டடம் பழுதடைந்து, நூலகம் மூடப்பட்டது. இதன் காரணமாக பழுதடைந்த நூலகக் கட்டடம், பேரூராட்சி நிா்வாகத்தால் இடிக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டது.

Advertisement

இதனால், இப்பகுதி மக்கள் நூலகத்தை பயன்படுத்த முடியாத நிலை நீடிக்கிறது. எனவே, இந்த நூலகத்தை புனரமைத்து மீண்டும் திறக்க வேண்டும் வேண்டுமென சன்னாநல்லுா் பகுதி மக்களும், வா்த்தக சங்கத்தினரும் மாவட்ட நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.