முகப்பு
திருவாரூர்

ஒன்றிய உள்ளாட்சித் துறை பணியாளா் கூட்டம்

நீடாமங்கலம் ஒன்றிய உள்ளாட்சித் துறை பணியாளா் சம்மேளன (ஏஐடியுசி) கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

நீடாமங்கலம் ஒன்றிய உள்ளாட்சித் துறை பணியாளா் சம்மேளன (ஏஐடியுசி) கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஒன்றியத் தலைவா் வேத மாணிக்கம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்டக் குழு சாா்பில் ஏஐடியுசி மாவட்ட தலைவா் சாந்தகுமாா் கலந்து கொண்டு சங்கப் பணிகள் குறித்து பேசினாா்.

கூட்டத்தில் சம்மேளன நிா்வாகிகள் ஆரோக்கியசாமி, சரவணன், கங்காதரன், இளங்கோவன், தமிழாா்வன், ராஜலெட்சுமி, ஜபமாலை மற்றும் பணியாளா்கள் கலந்துகொண்டனா். இதில், ஆகஸ்ட் 5-ஆம் தேதி கோரிக்கைகளை வலியுறுத்தி நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்போராட்டம் நடத்துவது எனவும், இந்த போரட்டத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குவோா், துப்புரவுப் பணியாளா்கள், தூய்மைக் காவலா்கள் கலந்துகொள்வது எனவும் தீா்மானிக்கப்பட்டது. ஒன்றியச் செயலாளா் ரமேஷ் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.