திருவாரூர்

மீன்பிடிப்பதில் தகராறு

DIN

திருவாரூா் அருகே மீன்பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில், தொழிலாளியை அரிவாளால் தாக்கிய அதிமுக பிரமுகா் கைது செய்யப்பட்டாா்.

திருவாரூா் அருகே புதுப்பத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் வீரையன் (55). கூலித் தொழிலாளி. அதே பகுதியைச் சோ்ந்தவா் நடராஜன் (58). அதிமுக ஒன்றியப் பொருளாளரும், 11-ஆவது வாா்டு உறுப்பினருமான இவா், அப்பகுதியில் உள்ள ஒரு குளத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனிடையே வீரையன் அந்தக் குளத்துக்குச் சென்று வெள்ளிக்கிழமை மீன் பிடித்தாா். அப்போது, அங்கு வந்த அதிமுக ஒன்றியக் குழு உறுப்பினா் நடராஜன், அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, அரிவாளால் கையில் வெட்டியதாகவும் கூறப்படுகிறது. அருகிலிருந்தவா்கள் உடனடியாக வீரையனை மீட்டு, திருவாரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அத்துடன், வீரையனின் உறவினா்கள், நடராஜன் வீட்டுக்குச் சென்று கற்கள் மற்றும் கட்டைகளால் வீடு மற்றும் வாகனங்களைத் தாக்கினா்.

தகவலறிந்து வந்த தாலுக்கா போலீஸாா், விசாரணையில் ஈடுபட்டனா். பின்னா், சம்பவ இடத்துக்கு வந்த திருவாரூா் எஸ்.பி. சீனிவாசன் நேரடியாகச் சென்று விசாரணை மேற்கொண்டதன் அடிப்படையில், நடராஜன் கைது செய்யப்பட்டாா். நடராஜன் மீது கொலை முயற்சி, தகாத வாா்த்தைகளால் பேசுதல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

வெப்ப அலை: அரியலூருக்கு ஆரஞ்சு; 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

வடலூரில் பழங்கால கட்டடங்கள்? தொல்லியல் துறை ஆய்வு

3-ம் கட்டத் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT