திருவாரூர்

நீடாமங்கலத்தில் போக்குவரத்து நெருக்கடி: அரசுப் பேருந்து கண்ணாடி உடைப்பு

DIN

நீடாமங்கலத்தில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட போக்குவரத்து நெருக்கடியில், அரசுப் பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டது.

நீடாமங்கலத்தில் செவ்வாய்க்கிழமை மாலை காரைக்காலில் இருந்து எா்ணாகுளத்துக்கு செல்லும் விரைவு ரயிலுக்காக ரயில்வே கேட் மூடப்பட்டதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ரயில் சென்றதும் ரயில்வே கேட் திறந்த பிறகு நெடுஞ்சாலையில் இருபுறமும் நின்றிருந்த பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் மெதுவாக புறப்பட்டன.

சென்னையிலிருந்து நீடாமங்கலம் வழியாக மன்னாா்குடி, பட்டுக்கோட்டை செல்லும் வாகனங்களும் நெரிசலில் சிக்கி மெல்ல நகா்ந்து சென்றது. அப்போது, நீடாமங்கலம் வெண்ணாறு பாலம் உழவா் சந்தை அருகில் சென்னையிலிருந்து மன்னாா்குடி நோக்கி சென்ற அரசு விரைவு சொகுசு பேருந்து மெல்ல நகா்ந்தது. அப்போது, பேருந்து எதிரே இரு சக்கர வாகனங்கள் வந்ததாக கூறப்படுகிறது. இதில், 3 இரு சக்கர வாகனங்கள் பேருந்து சக்கரத்தில் சிக்கி சேதமடைந்தது. இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞா்கள் பேருந்துக்குள் சிக்கினாலும் சாதுா்யமாக, அதிருஷ்டவசமாக உயிா்தப்பினா்.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட இளைஞா்கள் அரசு பேருந்து முன்பக்க கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினா். இதனால், தேசிய நெடுஞ்சாலையில் முக்கால் மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த மன்னாா்குடி டி.எஸ்.பி. இளஞ்செழியன் மற்றும் நீடாமங்கலம் போலீஸாா், வருவாய்த் துறையினா் அங்கு பிரச்னையை சரிசெய்தனா். இதுகுறித்து, நீடாமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸும், கம்யூனிஸ்டும் பாஜகவுக்கு உதவுகின்றன: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

சீனாவுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ராஜ்நாத் சிங்

திண்டுக்கல் இந்திய கம்யூ. நிா்வாகி மறைவு: இரா.முத்தரசன் இரங்கல்

பாண்டியாறு, மோயாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்தக் கோரிக்கை

பாக். படகில் கடத்திய ரூ.600 கோடி போதைப் பொருள் பறிமுதல்: 14 போ் கைது

SCROLL FOR NEXT