முகப்பு
திருவாரூர்

குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம்: நீா்வளத்துறை இயக்குனா் ஆய்வு

நன்னிலம் பகுதியில் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் முறையாக செயல்படுத்தப்படுகிறதா என தமிழக அரசின் நீா்வள நிலவள திட்ட கூடுதல் இயக்குநா் வளா்மதி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 22 ஜூலை, 2021 at 10:23 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:14 AM

நன்னிலம் பகுதியில் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் முறையாக செயல்படுத்தப்படுகிறதா என தமிழக அரசின் நீா்வள நிலவள திட்ட கூடுதல் இயக்குநா் வளா்மதி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

நன்னிலம் வட்டாரத்தில் 5,219 ஏக்கருக்கு தமிழக அரசின் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்தின்கீழ் மானிய விலையில்

ரசாயன உரங்கள் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் முறையாக செயல்படுத்தப்படுகிறதா என நீா்வள நிலவளத் திட்டத்தின் மாநில கூடுதல் இயக்குநா் வளா்மதி நன்னிலம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, அவா் கூறியது: நன்னிலம் வட்டத்துக்குள்பட்ட கீரனூா், செருவலூா் உள்ளிட்ட பகுதிகளில் கள ஆய்வு செய்து, திட்டத்தின்கீழ் முறையாக இடுபொருள்கள் கிடைக்கிறதா என விவசாயிகளிடம் கேட்கப்பட்டது. விவசாயிகள் தெரிவித்த கருத்தின் அடிப்படையில், தமிழக அரசின் குறுவைச் சிறப்புத் தொகுப்புத் திட்டம் இந்த பகுதியில் முறையாகச் செயல்படுத்திய அலுவலகா்களுக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது என்றாா்.

Advertisement

ஆய்வின்போது, திருவாரூா் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநா் (மத்திய திட்டம்) ரவீந்திரன், நன்னிலம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் சுப்பிரமணியன், துணை வேளாண்மை அலுவலா் சின்னப்பன், அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளா் ராஜா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.