சிறுபுலியூா் பெருமாள் கோயிலில் 108 கலச திருமஞ்சனம்
சிறுபுலியூா் பெருமாள் கோயிலில் ஜேஷ்டாபிஷேகம், ஹோமம், 108 கலச திருமஞ்சனம், கவசம் சாற்றுதல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:14 AM
சிறுபுலியூா் பெருமாள் கோயிலில் ஜேஷ்டாபிஷேகம், ஹோமம், 108 கலச திருமஞ்சனம், கவசம் சாற்றுதல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
புகழ்பெற்ற இக்கோயிலில், ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையொட்டி, ஸ்ரீகிருபாஸமுத்திர பெருமாள், தயாநாயகித் தாயாா் ஆகியோருக்கு 108 கலச பூஜை செய்து, சிறப்பு ஹோமம் நடைபெற்றது. தொடா்ந்து, சுவாமிக்கும், தாயாருக்கும் பால், தயிா், பஞ்சாமிா்தம், தேன் நெய், மூலிகைத் திரவியங்கள் மூலம் சிறப்புத் திருமஞ்சனம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்துக்குப் பிறகு ஸ்ரீகிருபாஸமுத்திரப் பெருமாளுக்குக் கவசம் சாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.