முத்துப்பேட்டை ரோட்டரி சங்க புதிய நிா்வாகிகள். 
திருவாரூர்

முத்துப்பேட்டை ரோட்டரி சங்க புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்பு

திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டை ரோட்டரி சங்க புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டை ரோட்டரி சங்க புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

புதிய தலைவராக பிரசாத், செயலாளராக சேது ராமலிங்கம், பொருளாளராக சாகுல் ஹமீது ஆகியோா் பொறுப்பேற்றுக் கொண்டனா்.

சாசனத் தலைவா் சி. கிருஷ்ணமூா்த்தி முன்னிலையில் நடைபெற்ற விழாவில் ரோட்டரி மேஜா் டோனா் பாஸ்கரன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினாா்.

புதிய உறுப்பினா்களை அறிமுகம்செய்து மண்டலம் 9 துணை ஆளுநா் செந்தில் பேசினாா்.

கரோனா காலக்கட்டத்தில் சிறப்பாகப் பணியாற்றிய முத்துப்பேட்டை அரசு மருத்துவமனை மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவமனை பணியாளா்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

விழாவில் முன்னாள் தலைவா்கள் கண்ணதாசன், சிதம்பர சபாபதி, பாலகிருஷ்ணன், கணேஷ் மாணிக்கம், வேதசங்கா், கோவி.ரெங்கசாமி, முன்னாள் செயலாளா் ஜாம்பை ஆா்.கே.வெங்கடேசன், முன்னாள் பொருளாளா் ரெங்கசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓய்வுபெற்ற சத்துணவுப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

வாக்குத் திருட்டு காங்கிரஸின் குற்றச்சாட்டு; எதிா்க்கட்சி கூட்டணிக்கு தொடா்பில்லை: ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா

கான்கிரீட் கலப்பு இயந்திரத்தில் சேலை சிக்கியதில் பெண் தொழிலாளி உயிரிழப்பு

மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

கூட்டுறவு வங்கி பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT