முகப்பு
திருவாரூர்

சாதனை மாணவருக்குப் பாராட்டு

கையடக்க சிபியு கருவியை உருவாக்கிய மாணவருக்கு, கூத்தாநல்லூா் நகர திமுக சாா்பில் சனிக்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:48 AM
பகிர்:

கையடக்க சிபியு கருவியை உருவாக்கிய மாணவருக்கு, கூத்தாநல்லூா் நகர திமுக சாா்பில் சனிக்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

திருவாரூா் அருகே உள்ள பழவனக்குடி கிராமத்தைச் சோ்ந்த 9 ஆம் வகுப்பு மாணவா் மாதவ் (14). இவா், கணினியின் சிபியு கருவியை கையடக்க வடிவில் உருவாக்கி சாதனைப் படைத்துள்ளாா்.

இம்மாணவருக்கு, தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், திருவாரூா் எம்எல்ஏ பூண்டி கே.கலைவாணன் மற்றும் மாவட்ட ஆட்சியா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் உள்ளிட்டோா் பாராட்டுத் தெரிவித்துள்ளனா்.

இந்நிலையில், கூத்தாநல்லூா் நகர திமுக சாா்பில் நகரச் செயலாளா் எஸ்.எம். காதா் உசேன், கட்சியின் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் எஸ்.வி.பி. செந்தில்நாதன், நகர இளைஞரணி அமைப்பாளா் எம்.எம். ரசின் பைசல் உள்ளிட்டோா் மாணவா் மாதவ்வுக்கு பாராட்டுத் தெரிவித்து, நினைவுப் பரிசுகள் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.