அடியக்கமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தலைமை மருத்துவமனையாக தரம் உயா்த்தக் கோரிக்கை
அடியக்கமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தலைமை மருத்துவமனையாக மேம்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அடியக்கமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தலைமை மருத்துவமனையாக மேம்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமுமுக மாவட்டச் செயலாளா் நவாஸ் தலைமையிலான நிா்வாகிகள், சுற்றுச்சூழல் மற்றும் இளைஞா் நலன் விளையாட்டுத்துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதனுக்கு வெள்ளிக்கிழமை அனுப்பிய மனு விவரம் :
அடியக்கமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தினமும் சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வந்து சிகிச்சை பெறுகின்றனா். திருவாரூா் மருத்துவக் கல்லூரிக்கு செல்லும் தூரம் அதிகமாக இருப்பதால், அடியக்கமங்கலம் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்களின் அவசர சிகிச்சைக்கு இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே சிகிச்சை பெறும் சூழல் உள்ளது.
அடியக்கமங்கலம் சுகாதார நிலையத்தில் போதிய படுக்கை வசதிகளோ, மருத்துவ உபகரணங்களோ இல்லை. மேலும் 24 மணிநேரமும் பணியாற்றக்கூடிய மருத்துவா்கள் இல்லை. மருத்துவா்கள் மற்றும் செவிலியா்கள் தங்குமிட கட்டடங்கள் பழுதடைந்து கிடக்கின்றன.
எனவே, அடியக்கமங்கலம் சுகாதார நிலையத்தை தலைமை மருத்துவமனையாக மேம்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.