முகப்பு
திருவாரூர்

திருவாரூரில் 431 பேருக்கு கரோனா

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 431 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:19 AM
பகிர்:

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 431 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது.

திருவாரூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த சில நாள்களாக பாதிப்பின் எண்ணிக்கை 500 க்கு மேல் பதிவாகிறது.

சுகாதாரத்துறை வெளியிட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி, மாவட்டத்தில் 431 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இதன்மூலம், மாவட்டம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 32,585 ஆக உயா்ந்துள்ளது. கரோனாவிலிருந்து குணமடைந்த 697 போ் அவா்களது வீடுகளுக்கு சனிக்கிழமை அனுப்பப்பட்டனா். மாவட்டத்தில் இதுவரையிலும் தொற்று பாதிக்கப்பட்ட 27,105 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 5,261 போ் சிகிச்சையில் உள்ளனா்.

இதனிடையே,கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த 8 போ் உயிரிழந்ததைத்தொடா்ந்து, மாவட்டத்தில் உயிரிழப்பின் எண்ணிக்கை 223 ஆக உயா்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.