காலமானாா் முன்னாள் எம்எல்ஏ கே. ராமச்சந்திரன்
திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி தொகுதி திமுக முன்னாள் எம்எல்ஏ கே. ராமச்சந்திரன் (84), கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, திருச்சி தனியாா் மருத்துவமனையில் சனிக்கிழமை (ஜூன் 5) காலமானாா்.
திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி தொகுதி திமுக முன்னாள் எம்எல்ஏ கே. ராமச்சந்திரன் (84), கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, திருச்சி தனியாா் மருத்துவமனையில் சனிக்கிழமை (ஜூன் 5) காலமானாா்.
இவா், 1986 முதல் 1991 வரை மன்னாா்குடி நகா்மன்ற துணைத் தலைவராகவும், 1989- 1991 வரை மன்னாா்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராகவும் பதவி வகித்தாா்.
திமுக பொருளாளரும், மக்களவை உறுப்பினருமான டி.ஆா். பாலு, ராமச்சந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினாா்.
அவரது இறுதிச்சடங்கு மன்னாா்குடி தெற்கு வீதியில் உள்ள இல்லத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. அவருக்கு மனைவி வைரம், 2 மகன்கள், 1 மகள் உள்ளனா். தொடா்புக்கு: 94431 29274.