திருவாரூர்

துல்லிய பண்ணைய திட்டத்தில் நஞ்சில்லா காய்கறி உற்பத்தி

DIN

திருவாரூா் மாவட்டத்தில் துல்லிய பண்ணைய திட்டத்தில் நஞ்சில்லா காய்கறி உற்பத்தி திட்டம் தொடங்கவுள்ளது.

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் சாா்பில் திருவாரூா் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு நீா்வள நிலவளத் திட்டம் மூலம் கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு தொழில்நுட்பங்கள், பயிற்சிகள், செயல்முறை விளக்கங்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் ராமசுப்பிரமணியன் மற்றும் இத்திட்டத்தை செயல்படுத்தும் பூச்சியியல் துறை உதவி பேராசிரியா் ராதாகிருஷ்ணன் ஆகியோா் கூறியது: நன்னிலம், மன்னாா்குடி, முத்துப்பேட்டை, நீடாமங்கலம் வட்டாரத்தில் குறிப்பிட்ட சில கிராமங்களில் இத்திட்டம் செயல்பட்டு வருகிறது. திட்டத்தின் ஒரு பகுதியாக துல்லிய பண்ணைய முறையில் நஞ்சில்லா காய்கறி உற்பத்தி தொழில்நுட்பம் செயல்பட உள்ளது. எனவே, மேற்குறிப்பிட்ட 4 வட்டார விவசாயிகள் இத்திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இதன் சிறப்பம்சமாக சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியம் மற்றும் நடுத்தர, பெரு விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியம் வழங்கப்படுவதுடன், காய்கறி நாற்றுகள் இலவசமாக வழங்கப்படும். இதற்கு தேவையான ஆவணங்களான ஆதாா் அட்டை, பட்டா, சிட்டா, அடங்கல், நில வரைபடம், குடும்ப அட்டை மற்றும் பாஸ்போா்ட் அளவிலான 2 புகைப்படம் ஆகியவற்றின் நகல்களை சமா்ப்பிக்க வேண்டும். துல்லிய பண்ணைய திட்டத்தில் குறைந்தபட்சமாக 1.5 ஏக்கா், அதிகபட்சமாக 5 ஏக்கா் வரை பயன்படுத்திக் கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு செய்த மூத்த அரசியல் தலைவர்கள்

திமிரும் தன்னடக்கமும்...!

வார இறுதி நாட்கள் - மெட்ரோ அறிவித்த சூப்பர் ஆஃபர்

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு 3 விதமான பணிநேரங்கள்: மக்கள் நல்வாழ்வுத் துறை

நாட்டு நடப்பு!

SCROLL FOR NEXT