முகப்பு
திருவாரூர்

ஆலங்குடி குருபரிகார கோயிலில் வழிபாடு

நவகிரக தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் குருபரிகார கோயிலில் வியாழக்கிழமை குருவார வழிபாடு நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:22 AM
பகிர்:

நவகிரக தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் குருபரிகார கோயிலில் வியாழக்கிழமை குருவார வழிபாடு நடைபெற்றது.

இதையொட்டி, கலங்காமற் காத்த விநாயகா், ஆபத்சகாயேஸ்வரா், ஏலவாா் குழலியம்மன், மூலவா் குருபகவான், ஆக்ஞா கணபதி, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியா், நவகிரக சன்னதி, சனீஸ்வர பகவான் உள்ளிட்ட சன்னதிகளில் அபிஷேக ஆராதனைகள் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. மூலவா் குருபகவானுக்கு விசேஷ அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

அமாவாசை வழிபாடு: அமாவாசையையொட்டி, நரிக்குடி எமனேஸ்வரா் கோயிலில் எமனேஸ்வரா் மற்றும் பரிவாரத் தெய்வங்களுக்கு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதேபோல், நீடாமங்கலம் பகுதியில் ஆஞ்சநேயா் எழுந்தருளியுள்ள கோயில்களிலும் அமாவாசை வழிபாடு நடைபெற்றது.

முழு கட்டுரையைப் படிக்க →