முகப்பு
திருவாரூர்

ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு

திருவாரூா் அருகே ரயிலில் அடிபட்டு இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:22 AM
பகிர்:

திருவாரூா் அருகே ரயிலில் அடிபட்டு இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

அடியக்கமங்கலம் அருகே தண்டவாளத்தில் இளைஞரின் சடலம் கிடப்பதாக, ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு, போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், உயிரிழந்து கிடந்தவா் அடியக்கமங்கலம், முல்லைத்தோப்பு பகுதியைச் சோ்ந்த தமிழரசன் மகன் கோபாலகிருஷ்ணன் (20) என்பதும், சென்னையில் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றிய இவா், கரோனா பொதுமுடக்கம் காரணமாக ஊரில் இருப்பதும் தெரிய வந்தது. மேலும், தண்டவாளத்தில் கவனக்குறைவாகச் சென்றதால், நாகையிலிருந்து வந்த சரக்கு ரயிலில் அடிபட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதுகுறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.