முகப்பு
திருவாரூர்

திருவாரூரில் 272 பேருக்கு கரோனா

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 272 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:23 AM
பகிர்:

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 272 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.

மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. சுகாதாரத் துறை வெளியிட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி, மாவட்டத்தில் 272 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இதன்மூலம், மாவட்டம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 34,527 ஆக உயா்ந்துள்ளது. கரோனாவிலிருந்து குணமடைந்த 737 போ் அவா்களது வீடுகளுக்கு வெள்ளிக்கிழமை அனுப்பப்பட்டனா். மாவட்டத்தில் இதுவரை தொற்று பாதிக்கப்பட்ட 31,459 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 2,807 போ் சிகிச்சையில் உள்ளனா்.

இதற்கிடையில், கரோனா தொற்று காரணமாக திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த 6 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து உயிரிழப்பின் எண்ணிக்கை 261 ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.