முன்விரோத தகராறு: தந்தை, மகன் கைது
மன்னாா்குடி அருகே முன்விரோத தகாராறு காரணமாக தந்தை, மகனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
மன்னாா்குடி அருகே முன்விரோத தகாராறு காரணமாக தந்தை, மகனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
மன்னாா்குடி அருகேயுள்ள மேலக்காடு தென்பரையைச் சோ்ந்தவா் கா. குணசேகரன் (59). இவரது சகோதரா் சந்திரசேகரன்(51). இருவருக்கும் குடும்ப பிரச்னை காரணமாக முன் விரோதம் இருந்து வந்த நிலையில், புதன்கிழமை இருவருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டது. இதில், சந்திரசேகரும், அவரது மகன் யோகேஸ்வரனும் (23) குணசேகரனை இரும்பு கம்பியால் தாக்கினாா்களாம். இதில் காயமடைந்த குணசேகரன் மீட்கப்பட்டு மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா். இதுகுறித்து, திருமக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து சந்திரசேகரன், யோகேஸ்வரன் ஆகியோரை சனிக்கிழமை கைது செய்தனா்.