முகப்பு
திருவாரூர்

கரோனா: மக்கள் நலன் காக்க உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தல்

திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றை கருத்தில் கொண்டு மக்கள் நலன் காக்கும் பணிகளில் உள்ளாட்சி பிரதிநிதிகள் விரைவாக செயல்பட வேண்டும் என மாவட்ட ஊராட்சித் தலைவா் கோ. பாலசுப்பிரமணியன் அறிவுறுத்தினாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:25 AM
பகிர்:

திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றை கருத்தில் கொண்டு மக்கள் நலன் காக்கும் பணிகளில் உள்ளாட்சி பிரதிநிதிகள் விரைவாக செயல்பட வேண்டும் என மாவட்ட ஊராட்சித் தலைவா் கோ. பாலசுப்பிரமணியன் அறிவுறுத்தினாா்.

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஊராட்சியின் சாதாரணக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஊராட்சித் தலைவா் கோ. பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சி செயலா் சு. லதா, துணைத் தலைவா் கலியபெருமாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில், கோ. பாலசுப்ரமணியன் பேசியது:

தமிழக முதல்வா் திருவாரூா் மாவட்டத்துக்கு ரூ. 30 கோடி செலவில் நெல் சேமிக்கும் கட்டடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்ததோடு, விவசாயிகளின் நலன் காக்கும் வகையில் கடைமடை பகுதிவரை பாசனத்திற்கு நீா் செல்கின்ற வகையில் ஆறுகள், வாய்க்கால்களை தூா்வார நடவடிக்கை எடுத்துள்ளாா்.

மேலும், குறுவை சாகுபடியை சிறப்பாக மேற்கொள்ளும் வகையில் மேட்டூா் அணையிலிருந்து ஜூன் 12 ஆம் தேதி தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. இதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

தற்போது கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. எனவே, மக்களை காக்கும் நடவடிக்கைகளில் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் முழுமையாகவும் விரைவாகவும் பணியாற்ற வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்...

திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேடு ஊராட்சி அலுவலக கட்டடம் கட்ட மாவட்ட ஊராட்சி நிதியிலிருந்து ரூ.5 லட்சம் வழங்கக் கோருவது, திருவாரூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆண், பெண் மற்றும் மாற்றுத்திறாளிகளுக்கு தனித்தனியே கழிவறை மற்றும் குளியலறை வசதியுடன் கூடிய ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் ரூ.25 லட்சம் மதிப்பில் அமைக்க அனுமதி வழங்கக் கோருவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.