முகப்பு
திருவாரூர்

நிவாரணப் பொருள்கள் வழங்கல்

 மன்னாா்குடியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணப் பொருள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:25 AM
பகிர்:

 மன்னாா்குடியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணப் பொருள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

மன்னாா்குடியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கரோனா உதவி மையம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம், மன்னாா்குடி தாமரைக்குளம் வடகரையில் உள்ள அருந்ததியா் குடியிருப்பில் வசிப்பவா்களுக்கு அரிசி, காய்கனி, மளிகைப் பொருள்கள் அடங்கிய நிவாரண தொகுப்பு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், கட்சியின் மாவட்டச் செயலா் ஜி. சுந்தரமூா்த்தி பங்கேற்று, 100-க்கும் மேற்பட்டவா்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினாா். இதில், சிபிஎம் நகரச் செயலா் ஜி. ரெகுபதி, உதவி மைய நிா்வாகிகள் ஜி. தாயுமானவன், எஸ். ஏகாம்பரம், ஜி. முத்துகிருஷ்ணன், சிஐடியு ஆட்டோ சங்க மாவட்ட பொருளாளா் பொன்.ஆறுமுகம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.