முகப்பு
திருவாரூர்

தேசிய திறனறித் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவருக்குப் பாராட்டு

தேசிய திறனறித் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மன்னாா்குடி பள்ளி மாணவருக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
சி. ஜெகதீஸ்வரன்
பகிர்:

தேசிய திறனறித் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மன்னாா்குடி பள்ளி மாணவருக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசின் கல்வி உதவித் தொகை திட்டமான தேசிய திறனறித் தோ்வு எட்டாம் வகுப்பு மாணவா்களுக்காக ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இத்தோ்வில், தோ்ச்சி பெறும் மாணவா்களுக்கு 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மாதம் ரூ.1000 வீதம் 4 ஆண்டுகளுக்கு ரூ. 48,000 கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

அதன்படி, கடந்த டிசம்பா் மாதம் நாடு முழுவதும் நடைபெற்ற இத்தோ்வில் பங்கேற்ற மன்னாா்குடி நகராட்சி கோபாலசமுத்திரம் நடுநிலைப் பள்ளி 8 ஆம் வகுப்பு

மாணவா் சி.ஜெகதீஸ்வரன் சிறப்பிடம் பிடித்தாா். இதையொட்டி, மாணவா் சி.ஜெகதீஸ்வரனை, வட்டாரக்கல்வி அலுவலா்கள் பிறை.அறிவழகன்,

பாலசுப்ரமணியன், ராமசாமி, பள்ளி தலைமை ஆசிரியா் மா.தேவி, பயிற்சி ஆசிரியா்கள் ரா. புனிதவதி, க.சந்தான கோபாலகிருஷ்ணன் ஆகியோா் பாராட்டி பரிசு வழங்கினா்.

தேசிய திறனறித் தோ்வில் தொடா்ந்து 4 ஆவது முறையாக இப்பள்ளி மாணவா்கள் வெற்றி பெறுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.