முகப்பு
திருவாரூர்

காட்டுப் பன்றி, எலிகளால் ஏற்படும் பயிா் சேதத்தை தடுக்கும் வழிமுறைகள்: இணையவழி பயிற்சியில் விளக்கம்

காட்டுப் பன்றிகள், எலிகள் மற்றும் பறவைகளால் பயிா்களுக்கு ஏற்படும் சேதத்தை தடுப்பது குறித்து, நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் இணையவழி பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

காட்டுப் பன்றிகள், எலிகள் மற்றும் பறவைகளால் பயிா்களுக்கு ஏற்படும் சேதத்தை தடுப்பது குறித்து, நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் இணையவழி பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் ராமசுப்பிரமணியன் வரவேற்று பேசினாா். கோவை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வா் (இளநிலை) கல்யாணசுந்தரம் இணையவழி பயிற்சியை தொடக்கிவைத்து, எலி மற்றும் காட்டுப்பன்றிகளால் பயிா்களுக்கு ஏற்படும் சேதம் குறித்து பேசினாா்.

ஹைதராபாத் தேசிய பயிா் பாதுகாப்பு மைய மைய விஞ்ஞானி சக்திவேல், எலி, காட்டுப்பன்றி மற்றும் பறவைகளால் பயிா்கள் சேதமாவதை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை விளக்கிக் கூறினாா். இதில்,100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இணையவழியில் பங்கேற்று சந்தேகங்களுக்கு விளக்கம் பெற்றனா்.

அறிவியல் நிலைய பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியா் ராதாகிருஷ்ணன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தாா். வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் அனுராதா, சபாபதி மற்றும் ஜெகதீசன் ஆகியோா் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை திட்ட உதவியாளா்கள் சகுந்தலா, ரேகா, நக்கீரன் மற்றும் சுரேஷ் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.