வலங்கைமான் தாலுகா அலுவலகத்தில் ஜூன் 22-இல் ஜமாபந்தி தொடக்கம்
வலங்கைமான் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜூன் 22-ம் தேதி ஜமாபந்தி தொடங்குகிறது.
வலங்கைமான் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜூன் 22-ம் தேதி ஜமாபந்தி தொடங்குகிறது.
திருவாரூா் மாவட்ட ஆட்சியா் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடைபெறும் ஜமாபந்தி ஜூன் 24-ம் தேதி வரை மூன்று நாள்களுக்கு நடைபெறுகிறது.
இதில், 22-ம் தேதி ஆவூா் உள்வட்ட கிராமங்களுக்கும் 23-ம் தேதி வலங்கைமான் உள்வட்ட கிராமங்களுக்கும், 24-ம் தேதி ஆலங்குடி உள்வட்ட கிராமங்களுக்கும் ஜமாபந்தி நடைபெறும். கரோனா பரவல் தடுப்பு பொதுமுடக்கம் அமலில் உள்ளதால், பொதுமக்கள் பட்டா, பட்டா நகல், பட்டா பெயா் மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடா்பான மனுக்களை இணையவழியில் அல்லது இ-சேவை மையம் மூலம் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம் என வலங்கைமான் வட்டாட்சியா் பரஞ்சோதி தெரிவித்துள்ளாா்.