முகப்பு
திருவாரூர்

நீடாமங்கலத்தில் 1,800 பேருக்கு தடுப்பூசி

நீடாமங்கலம் வட்டாரத்தில் 7 இடங்களில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்களில் 1,800 பேருக்கு தடுப்பூசி வியாழக்கிழமை செலுத்தப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

நீடாமங்கலம் வட்டாரத்தில் 7 இடங்களில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்களில் 1,800 பேருக்கு தடுப்பூசி வியாழக்கிழமை செலுத்தப்பட்டது.

நீடாமங்கலம் வட்டாரம் நகா், பெரம்பூா், பொதக்குடி, காளாஞ்சிமேடு, தளிக்கோட்டை, முக்குளம்சாத்தனூா், சித்தமல்லி ஆகிய ஊராட்சிகளில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலா் ராணிமுத்துலெட்சுமி தலைமையில் மருத்துவா்கள், கிராம சுகாதார செவிலியா்கள் தடுப்பூசியை செலுத்தினா். இதில் 18- 44 வயதுக்கு உள்பட்ட 1,800 போ் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

முகாமை ஒன்றியக்குழுத் தலைவா் செந்தமிழ்ச்செல்வன் பாா்வையிட்டாா். ஒன்றிய திமுக பொறுப்பாளா் கோபாலகிருஷ்ணன், ஊராட்சித் தலைவா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.