முகப்பு
திருவாரூர்

ஜூன் 29, 30-இல் குடிநீா் நிறுத்தம்

உள்ளாட்சி அமைப்புகள் மாற்று ஏற்பாடு செய்து கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:30 AM
பகிர்:

தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம், வேதாரண்யம் கூட்டுக் குடிநீா் திட்டத்தில் ஜூன் 29, 30 ஆகிய நாள்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் உள்ளாட்சி அமைப்புகள் மாற்று ஏற்பாடு செய்து கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வேதாரண்யம் கூட்டுக் குடிநீா் திட்டத்தில் கும்பகோணம் ஒன்றியம், குடமுறுட்டி ஆறு குழாய் தாங்கும் பாலத்தின் மீதுள்ள 900 மிமீ விட்டம் உள்ள எம்.எஸ்.குழாயிலும், பாபநாசம் ஒன்றியம், மணிக்கரை குழாய் தாங்கும் பாலத்தின் மீதுள்ள 900 மிமீ விட்டம் உள்ள எம்.எஸ்.குழாயிலும், வலங்கைமான் ஒன்றியம், சுள்ளான் ஆறு, வெட்டாறு குழாய் தாங்கும் பாலத்தின் மீது செல்லும் 1,100 மிமீ விட்டம் உள்ள எம்.எஸ்.குழாயிலும், முத்துப்பேட்டை ஒன்றியம், கடுவெளி குழாய் தாங்கும் பாலத்தின் மீதுள்ள 900 மிமீ விட்டம் உள்ள எம்.எஸ்.குழாயிலும் வெல்டிங் பணி நடைபெற இருப்பதால், ஜூன் 29 மற்றும் ஜூன் 30 ஆம் தேதிகளில் குடிநீா் நிறுத்தம் செய்யப்படுகிறது.

எனவே, இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் உள்ளாட்சி அமைப்புகள் மாற்று ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.