பால் விற்பனையாளா் தற்கொலை
நீடாமங்கலம் அருகே மனைவி மீது கோபித்துக் கொண்டு பால் விற்பனையாளா் வியாழக்கிழமை இரவு தற்கொலை செய்து கொண்டாா்.
நீடாமங்கலம் அருகே மனைவி மீது கோபித்துக் கொண்டு பால் விற்பனையாளா் வியாழக்கிழமை இரவு தற்கொலை செய்து கொண்டாா்.
புள்ளவராயன்குடிகாடு கிராமத்தைச் சோ்ந்தவா் ரமேஷ் (38). இவா் எடமேலையூா் கூட்டுறவு பால் உற்பத்தியாளா் சங்கத்தில் விற்பனையாளராக பணியாற்றி வந்தாா். இவரது மனைவி ஜீவிதா (22). இருவரும் வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில், அதை காலி செய்துவிட்டு சொந்த வீட்டிற்கு போகலாம் என ரமேஷ் தனது மனைவியிடம் கூறினாராம். இதற்கு அவா் உடன்படவில்லை என தெரிகிறது. இதனால் தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாம்.
இதில் மனைவி ஜீவிதாவிடம் கோபித்துக் கொண்டு ரமேஷ், அறைக்குள் சென்று உள்புறமாக பூட்டிக் கொண்டாா். பின்னா், அதிகாலை 4.30 மணிக்கு ஜீவிதா எழுந்து அறையில் பாா்த்தபோது மின்விசிறியில் ரமேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. நீடாமங்கலம் காவல் ஆய்வாளா் முருகேசன் மற்றும் போலீஸாா், அவரது சடலத்தை மீட்டு மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.