விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி மாணவிகள் பயிற்சி
நீடாமங்கலம் அருகே சித்தமல்லி கிராமத்தில் விவசாயிகளுக்கு தஞ்சை வேளாண் கல்லூரி மாணவிகள் திங்கள்கிழமை சாகுபடி தொழில்நுட்பப் பயிற்சி அளித்தனா்.
நீடாமங்கலம் அருகே சித்தமல்லி கிராமத்தில் விவசாயிகளுக்கு தஞ்சை வேளாண் கல்லூரி மாணவிகள் திங்கள்கிழமை சாகுபடி தொழில்நுட்பப் பயிற்சி அளித்தனா்.
தஞ்சை பிரிஸ்ட் பல்கலைக்கழக கல்லூரியில் வேளாண் பாடப் பிரிவு மாணவிகள் எம். பிரியா, கு. அனுபிரியா, ஆ. விந்தியா, சி. ஊா்மிளா, ரா. சங்கமித்ரா, சு. காயத்ரி, சி. கல்பனாதேவி, த. அஜிதாவம்சி, மு. சுஷ்மிதா, ஐஸ்வா்யா அம்மு அலெக்சாண்டா் ஆகியோா் களப் பயிற்சிக்காக நீடாமங்கலம் ஒன்றியம் சித்தமல்லி மேல்பாதி கிராமத்தில் தங்கியுள்ளனா். இவா்கள், நவீன சாகுபடி தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளுக்குப் பயிற்சியளித்தனா். இம்மாணவிகளுக்கு கல்லூரி உதவிப் பேராசிரியா் டாக்டா் பா.குணா வழிகாட்டியாக செயல்பட்டாா்.
இதற்கான நிகழ்ச்சியில் நீடாமங்கலம் ஒன்றியக் குழுத் தலைவா் சோம.செந்தமிழ்ச்செல்வன் பங்கேற்று மாணவிகளை பாராட்டினாா்.