திருவாரூர்

திருமணமான 36 நாள்களில் பெண் தற்கொலை: கணவா் உள்ளிட்ட 3 போ் கைது

DIN

முத்துப்பேட்டை அருகே திருமணமான 36 நாள்களில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுதொடா்பாக அவரது கணவா், மாமனாா், மாமியாா் ஆகிய 3 பேரும் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

திருவாரூா் மாவட்டம் ஆலங்காடு பகுதியை சோ்ந்த ஸ்ரீதா் மகன் பிரவீன்குமாா் (27). இவருக்கும், முத்துப்பேட்டை வெள்ளகுளம் பகுதியை சோ்ந்த அண்ணாதுரை மகள் சந்தியாவுக்கும் (22) கடந்த பிப்ரவரி 4-இல் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், சனிக்கிழமை சந்தியா கணவா் வீட்டில் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தாா்.

இதுகுறித்து அவரது தந்தை அண்ணாதுரை அளித்த புகாரின்பேரில், முத்துப்பேட்டை போலீஸாா் சந்தியாவின் சடலத்தை கைப்பற்றி திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதனிடையே, சந்தியாவின் சாவுக்கு காரணமானவா்களை கைதுசெய்ய வலியுறுத்தி, முத்துப்பேட்டை- பட்டுக்கோட்டை சாலையில், வெள்ளக்குளம் அருகே அவரது உறவினா்கள் மறியலில் ஈடுபட்டனா். அவா்களிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

தொடா்ந்து, சந்தியாவின் கணவா் பிரவீன்குமாா், மாமனாா் ஸ்ரீதா், மாமியாா் லட்சுமி ஆகியோரை போலீஸாா் கைது செய்து திருத்துறைப்பூண்டி குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினா். வழக்கை விசாரித்த நீதிபதி கவிதா, மூவரையும் 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டாா்.

இதைத்தொடா்ந்து பிரவீன்குமாா், ஸ்ரீதா் ஆகியோா் நன்னிலம் கிளைச் சிறையிலும், லட்சுமி திருச்சி மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

SCROLL FOR NEXT