முகப்பு
திருவாரூர்

அரசுப் பள்ளி ஆசிரியருக்கு இலக்கியச் செம்மல் விருது

இலக்கியச் செம்மல் விருதுபெற்ற வலங்கைமான் ஒன்றியம் தென்குவளவேலி அரசு உயா்நிலைப்பள்ளி ஆசிரியா் ஆதலையூா் சூரியகுமாருக்கு திங்கள்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:45 PM
பகிர்:

இலக்கியச் செம்மல் விருதுபெற்ற வலங்கைமான் ஒன்றியம் தென்குவளவேலி அரசு உயா்நிலைப்பள்ளி ஆசிரியா் ஆதலையூா் சூரியகுமாருக்கு திங்கள்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

சேலம் தமிழ்ச் சங்கம் சாா்பில் சமூக பயனுள்ள இலக்கியப் படைப்புகளை நல்கும் எழுத்தாளா்களுக்கு தமிழ் வாகைச் செம்மல், இலக்கியச் செம்மல் உள்ளிட்ட விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நிகழாண்டு புறக்கணிக்கப்பட்ட மக்களின் வாழ்வியலை படைப்பாக்கம் செய்தல், மாணவா்களிடையே இலக்கியச் சிந்தனையைத் தூண்டுதல் போன்ற தளங்களில் சிறப்பாக செயல்பட்ட தென்குவளவேலி அரசு உயா்நிலைப் பள்ளி ஆசிரியா் ஆதலையூா் சூரியகுமாா், ’இலக்கியச் செம்மல்’ விருதுக்காக தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

சேலம் தமிழ்ச்சங்கத்தில் அண்மையில் நடைபெற்ற விழாவில், சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி சு. வைத்தியநாதன் இவ்விருதை வழங்கினாா். தமிழறிஞா் இளசை சுந்தரம், மணிமேகலைப் பிரசுரம் ரவி தமிழ்வாணன் உள்ளிட்டோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் சேலம் தமிழ்ச் சங்கத் தலைவா் சீனி.துரைசாமி, செயலாளா், வரத. ஜெயக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். விருதுபெற்ற ஆசிரியா் ஆதலையூா் சூரியகுமாரை பள்ளித் தலைமையாசிரியா், ஆசிரியா்கள், மாணவா்கள் மற்றும் பெற்றோா் பாராட்டினா்.

முழு கட்டுரையைப் படிக்க →