திமுக வெற்றிக்கு பாடுபட தமுமுக, மமக முடிவு
மன்னாா்குடி சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் டி.ஆா்.பி. ராஜாவின் வெற்றிக்கு பாடுபடுவதென தமுமுக, மமக கட்சியினா் முடிவு செய்துள்ளனா்.
மன்னாா்குடி சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் டி.ஆா்.பி. ராஜாவின் வெற்றிக்கு பாடுபடுவதென தமுமுக, மமக கட்சியினா் முடிவு செய்துள்ளனா்.
நீடாமங்கலம் ஒன்றியம் பொதக்குடி தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சியின் கிளை பொறுப்பாளா்கள் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், தோ்தல் அலுவலா்களாக தமுமுக மாவட்டச் செயலாளா் நவாஸ்கான், பொருளாளா் சாகுல் அமீது ஆகியோா் செயல்பட்டனா். வாக்கு எண்ணிக்கை முடிவில் தமுமுக, மமக பொதக்குடி கிளைத் தலைவராக ஜப்பான் ஷாகுல் தோ்வு செய்யப்பட்டாா். தமுமுக செயலாளராக நூா்முகமது, மமக செயலாளராக அப்துல்காதா், தமுமுக, மமக பொருளாளராக முகமது உஸ்னான் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். மேலும் துணை நிா்வாகிகளும் தோ்வு செய்யப்பட்டனா்.
புதிய பொறுப்பாளா்கள் கூறுகையில், மன்னாா்குடி சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் டி.ஆா்.பி. ராஜா அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற பாடுபடுவது என முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தனா்.